யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று (23.04.2023) காலை 9.30 க்கு இடம்பெற்ற சிவாஜி கணேசன்பற்றிய ஆய்வு நூல் குறித்த நூல் அறிமுக நிகழ்வில் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் ஏற்பாட்டாளர்கள் அவமரியாதை செய்த நிலையில் ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நுாலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
ஊடகவியலாளர்களுக்கும் நிகழ்வின்
ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர்.
நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்ற நேரத்தில் அங்கு நின்ற ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஊடகவியலாளர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் நீங்கள் ஊடகவியலாளர்களா?
எந்த ஊடகம்?
அடையாள அட்டை காட்டுங்கோ அல்லாட்டி வெளிய போங்கோ
, காணொளி எடுக்க வேண்டாம்
படம் எடுத்தது காணும் நிகழ்வு மண்டபத்தை விட்டு வெளியேறுங்கள்
என ஊடகவியலாளரிடம் கடும் தொனியில் முரண்பாட்டை தோற்றுவித்தார்.
இதன்போது ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த ஏனையவர்களும் மெளனமாக இருந்தநிலையில் .
அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் நிகழ்வு மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ஏற்பாட்டாளர்களே, அவையைப் புரிந்து கொள்ள தெரியவில்லை.
அயல் நாட்டினர் வருகை தந்துள்ளமையை சிரங்கொள்ளவில்லை
அனைவரையும் u அவமரியாதை செய்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
யாழ்.தர்மினி