யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு கல்லூரி நாள் நிகழ்வுகள் 08.05.2023 காலை கல்லூரி பீற்றோ மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றன.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய சந்திரமௌலீசன் லலீசன் கலந்து கொண்டார். நிகழ்வில் கல்லூரியை அறிவோம் என்ற தொனிப் பொருளில் மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
வண பிதா யோசப் நைற் அவர்களால் 1823 ஆம் ஆண்டில் அங்கிலிக்கன் திருச்சபை சார்ந்து நல்லூரில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நாளே கல்லூரி நாளாகவும் நிறுவுனர் தினமாகவும் அனுட்டிக்கப்படுகிறது.
நிகழ்வின் முன்னதாக சென் ஜோன்ஸ் சிற்றாலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.