குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவித்தல்..!!!


திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த பின்னரே வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற வருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யவில்லை என்றால் தயவு செய்து வருவதை தவிர்க்குமாறு திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாடு செல்ல உள்ளவர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று வார விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து கடவுச்சீட்டு தயார் செய்பவர்களுக்கு அதற்கான ஆவணங்களை காண்பிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் கடவுச்சீட்டை மிகவும் இலகுவாக்கும் முறைமை தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here