கொழும்பில் பலத்த பாதுகாப்பு; நாட்டின் சில பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு..!!!


கொழும்பு நகரின் சில பகுதிகளில் நேற்றிரவு முதல் பாதுகாப்பினை பலப்படுத்த பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த (குறிப்பிடப்படாத) தகவல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவினர் இணைந்து பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை தவிர நாட்டின் சில பகுதிகளில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அண்மித்த பகுதியில் அரசாங்கத்திற்கு அழுத்தம் விடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட சிலர் தயாராவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
Previous Post Next Post


Put your ad code here