விபரீதத்தில் முடிந்த விளையாட்டு; 10 வயது சிறுவன் பலி; 12 வயது சிறுமி கைது..!!!


நீர்கொழும்பில், விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறுமி ஒருவரால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான இரண்டு சிறார்களும் விளையாடிக் கொண்டிந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விளையாட்டின்போது 12 வயதான சிறுமி ஒருவரால் 10 வயதான சிறுவனின் நெற்றிப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த குறித்த சிறுவன் நீர்க்கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (07) உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட 12 வயதான சிறுமியைக் கைது செய்து நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் பாதுகாப்புக் காரணமாக சிறுவர் நிலையமொன்றில் தடுத்து வைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கைதான சிறுமியின் தாய் வெளிநாட்டில் உள்ளார் எனவும், அவரது தந்தை வேறு திருமணம் முடித்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரிவந்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here