இன்றைய ராசிபலன் - 21.07.2023..!!!

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணியது கை கூடி வரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஆடம்பர பொருட்செலவை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமைக்கு அனுசரித்து செல்லுங்கள். நினைத்த லாபம் அடைய வாய்ப்புகள் உண்டு. உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டைகள் தோன்றி மறையும். கையில் பணம் இருக்கிறது என்பதற்காக வீண் செலவு செய்யாதீர்கள், எதிர்பாராத செலவுகள் வரக்கூடும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வுடன் காணக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் உழைக்க நினைத்தாலும் உடம்பு அதற்கு ஒத்துழைக்காது. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். வெளியிடங்களில் நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். இறை வழிபாடுகளின் மீது நாட்டம் அதிகரித்து காணப்படும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் மிகுந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையக்கூடிய பொன்னான நாளாக இன்றைய நாள் இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். எதற்காகவும் நம்பியவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள். சூழ்நிலை அறிந்து செயல்படுங்கள்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கட்டுப்பாடு நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்கள் மனதை நீங்கள் பல விதங்களில் மாற்றிக் கொள்ள முயற்சி எடுப்பீர்கள். நினைத்தது நடப்பதில் காலதாமதம் ஆகலாம் எனினும் மனம் தளராதீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக உயரும். ஆடம்பர பொருள் செலவு ஏற்படும்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கற்பனை வளம் மிகுந்த நாளாக இருக்கப் போகிறது. உங்கள் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தாய்வழி உறவினர்களிடம் இருந்து அனுகூலமான பலன்கள் உண்டாகும். பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணியது ஈடேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் இனிய செய்திகளை பெறுவீர்கள். மற்றவர்களுடைய பணியையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும் இதனால் பணிச்சுமை கூடும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. உற்றார், உறவினர்களிடம் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள். பணியிடங்களில் நீங்கள் சொல்வது தான் சரி என்று மற்றவர்களுடைய கருத்துக்களை புறக்கணிக்காதீர்கள்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தெய்வீகமான நல்ல நாளாக அமையப் போகிறது. இறை சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னோன்யம் இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால கனவுகள் நிறைவேறும். மனதில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்களை ஒழித்துக் கட்டுங்கள்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும். புதிய நபர்களுடைய அறிமுகம் ஏற்றத்தை கொடுக்கும். தகாத நண்பர்களின் உறவை துண்டியுங்கள். குடும்பத்தில் பெரியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் சொல் கேட்டு நடந்து கொள்வது நல்லது. பிடித்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். அவசிய பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் பொறுப்பாக நடந்து கொள்வது நல்லது. கூட்டாக செய்யும் செயல் வெற்றி அடையும். புதிய ஒப்பந்தங்கள் சாதக பலன்களை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் சற்று சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் தெளிவாக இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எடுத்த முடிவிலிருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளால் சில பிரச்சனைகள் வந்து செல்லும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் சாதக பலன்களை கொடுக்கும்.
Previous Post Next Post


Put your ad code here