யாழ் பல்கலையில் மகனின் பட்டத்தை கண்ணீருடன் வாங்கிய தாய்..!!!


யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் 37ஆவது பொதுப்பட்டமளிப்பு நேற்றையதினம் (19) ஆரம்பமான நிலையில் இன்று இரண்டாவது நாளாக பட்டமளிப்பு விழா இடம்பெறுகின்றது.

இதன் போது இறந்துபோன தனது மகனின் பட்டச் சான்றிதழை தாயார் கண்னீருடன் பெற்றுக்கொண்ட சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவர் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு தேர்த்தெடுப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது உயிருடன் இல்லாததால், இன்று இடம்பெற்ற 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் தேகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது.

மகனின் பட்டத்தை பெற்றபோது தாயார் கண்ணீர்விட்டு அழுத சம்பவம் அரங்கில் இருந்தோரின் கண்களையும் குளமாக்கியது.
Previous Post Next Post


Put your ad code here