யாழ்.வலிகாம வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத் தாக்கியதில் மாணவி கையைத் தூக்க முடியாமல் அவதிப் ட்டுள்ளார்.
மாணவியின் நிலையை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகம் மருந்தகம் ஒன்றில் நோவுக்குரிய மருந்துகளை வாங்கிப் பூசியுள்ளனர்.
இந்நிலையில் பாடசாலை விட்டதும் மாணவி வீடு சென்ற நிலையில் எனக்கு நடந்த சம்பவத்தை வீட்டாருக்கு தெரியப்படுத்தினார்.
இதனையடுத்து தமது மகள் கையை தூக்க முடியாமல் அவதிப்படும் நிலையை அறிந்த பெற்றோர் யாழ்.போதனா வைத்திய சாலையில் மகளை அனுமதித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளர் பிரட்லியை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
Tags:
sri lanka news