வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு..!!!


கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(28) பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24)இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்கவேண்டும் என்பதுடன் அன்றையதினம் வெள்ளிக்கிழமை  என்பதால் வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பதுடன் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here