லண்டனில் இருந்து யாழிற்கு வந்த சிறுவன் உயிரிழப்பு; மரண வீட்டிற்கு வந்து பலியான சோகம்..!!!

லண்டனில் இருந்து வந்த சிறுவன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவன் நேற்று கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது..

லண்டனில் இருந்து உறவினரின் மரண சடங்கிற்கு வந்திருந்த 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்ந்லையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here