பிரபல இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஹரன் (Hariharan) சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமான பணியாளர்களுடன் எடுத்துகொண்ட புகைபடங்கள் வெளியாயுள்ளது.
தமிழ் சினிமாக்கள் மட்டுமன்றி பிற மொழி பாடகராகவும் பாடகர் ஹரிஹரன் உள்ளார். இவரது பாடல்கள் பல ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டவை. தமிழ் சினிமாவில் 90களில் வந்த எத்தனையோ பாடல்கள் இப்போதும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் அதிக பாடல்கள் பாடியுள்ள இவர் மலையாளம், கன்னடம், மராத்தி, சிங்களா மற்றும் போஜ்பூரி என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
இந்நிலையில் சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமான பணியாளர்களுடன் ஹரிஹரன், மற்றும் விஜய் டிவி பிரபலங்களான மா . கா. ப ஆன்ந்த் , சிவாங்கி ஆகியோரும் எடுத்துகொண்ட புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதேவேளை அண்மை காலங்களில் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news