திருகோணமலை கப்பல்த்துறையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி மீது இன்றையதினம் காடையர் குழு தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தியாகத் தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்தி இன்று ஞாயிற்றுக்கிழமை (17) திருகோணமலை நகரை நோக்கி சென்ற போதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஊர்தி பயணமானது கடந்த 15 ஆம் திகதி பொத்துவிலிலிருந்து ஆரம்பமாகியதோடு 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் -நல்லூர் பகுதியைச் சென்றடைந்து நிறைவடையவுள்ளது.
இவ் ஊர்திப் பயணம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வருகிறது.