கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்திஅக்றோ தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீயினால் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(08) வெள்ளிக்கிழமை நண்பகல் வேளை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த தும்புத் தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளதுடன், தொழிற்சாலை வளாகத்திலுள்ள தென்னை மரங்களும், அருகிலுள்ள காணிகளில் உள்ள தென்னை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், கிராம சேவகர், கிராம மக்கள் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் ஆகியோரின் துணையுடன் தற்காலிகமாக குறித்த தீ அனர்த்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும், தீ கிராம குடியிருப்புகளுக்கு பரவாத வகையில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், குறித்த தும்புத் தொழிற்சாலையின் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Tags:
sri lanka news