களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது தமக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்றிரவு (07) குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் 22 வயதுடைய மாணவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்.
கரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் அகில இந்திரசேன என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
Tags:
sri lanka news