அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்..!!!


தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (09) அரிசி ஆலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது :

நேற்று வெள்ளிக்கிழமை (08) மாலை அரிசி ஆலையில் பணிகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது.

அதன் பின்னர், மறுநாளான இன்று (09) காலை 8 மணியளவில் அரிசி ஆலையை திறக்கச் சென்றபோது, அரிசி ஆலை தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள், ஏனைய உபகரணங்கள், தளபாடங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

அதனை தொடர்ந்து, அரிசி ஆலை உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியுள்ளதா அல்லது தீ வைக்கப்பட்டதா என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here