யாழில். வெளிநாடு செல்ல முகவருக்கு பணம் வழங்கி ஏமார்ந்த இளைஞன் உயிர்மாய்ப்பு..!!!



வெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பெரும்தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்து இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தோரால் காப்பாற்றப்பட்டு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் போது மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையின் போது , வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்திருந்தார்.

பணத்தினை வாங்கிய நபர் நீண்ட நாட்களாக பயண ஒழுங்குகளை செய்யாது காலம் தாழ்த்தி வந்தமையால் இளைஞன் மன விரக்தியில் இருந்ததாகவும், அதனாலயே தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
Previous Post Next Post


Put your ad code here