வவுனியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தையினை காணவில்லை..!!!


வவுனியா சிதம்பரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 04.10.2023 அன்று தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியினால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை இதனையடுத்து அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சாரம் மற்றும் பிங்க் கலர் சட்டையும் அணிந்து சென்றிருந்தார். எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 , 0774136383 , 0762477411 ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post


Put your ad code here