கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம்(08) கைது செய்துள்ளதோடு திருடப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளனர்
இந்நிலையில், சந்தேகநபர்களால் திருடப்பட்ட விலையுயர்ந்த தொலைக்காட்சி, மின்மோட்டர், மடிக்கணினி மற்றும் பெறுமதியான தொலைபேசி, தோடு, பெறுமதியான மணிக்கூடு என்பன மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம், உரும்பிராய் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூவர் எனவும் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
.jpg)