யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு முஸ்தீபு..!!!


யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, நாளை மறுதினம் புதன்கிழமை காலை ஆரம்பமாகும் பேரணி யாழ் நகரில் உள்ள வீதி வழியாக சென்று, இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கத்தினர் தெரிவித்தனர்.

குறிப்பாக அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்பவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே குறித்த போராட்டத்தை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here