
கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதல வீதிக்கு அருகில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
டுப்பிளிகேஷன் வீதியில் வர்த்தக அமைச்சுக்கு முன்னால் இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து வீழ்ந்ததில் காரின் பின்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
sri lanka news