யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் வளைவு அமைப்பு..!!!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு தற்காலிகமான வளைவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் இடம்பெற்று வருகிறது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post


Put your ad code here