சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற யாழ் இளைஞன், யுவதி கைது..!!!



சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் மற்றும் யுவதி இருவரும் கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரும் 19 வயது யுவதியுமாவார்.

இவர்கள் துபாய் செல்வதற்காக இன்று 01.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் பயண அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்கேகமடைந்த அதிகாரிகள் அவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

குறித்த நபர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்த அதிகாரிகள் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்காக போலியான தகவல்களுடன் இரண்டு போலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

விசாரணையின் போது தாம் தரகர் ஒருவரால் அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் செல்லும் இடம் குறித்து தமக்கு தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here