யாழ் மக்களுக்கு கண் பார்வை தொடர்பில் எச்சரிக்கை..!!!


யாழில் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார்.

கண்ணில் பார்வைக் குறைவு ஏற்படுவதற்கு வென்புறை, கண்ணாடி அணிதல், நீரிழிவு நோய், வயது காரணமாக வருகின்ற விழித்திரு நோய் ஆகியன முக்கிய காரணங்களாக உள்ளன.

இத்தாக்கங்களிலிருந்து விடுபட வேண்டும் என்றால் வாழ்க்கை நடைமுறைகளில் எங்களால் இயலுமானவற்றை நாங்கள் பின்பற்றுதல் வேண்டும்.

முக்கியமாக எங்களுடைய உணவு பழக்க வழக்கங்களில் நாங்கள் கூடுதலான பழ, மரக்கறி வகைகள் நாங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு நாளாந்தம் சூரிய ஒளியின் அளவு கண்ணில் படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது மாணவர்கள் மற்றும் அனைவரும் நவீன தொலைத்தொடர் சாதனங்களின் (டிவைஸ்) நேரத்தை குறைக்க வேண்டும்.

இந்த மூன்று நடைமுறைகளையும் நீங்கள் பின்பற்றினால் இனி வரும் காலங்களில் பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள கூடியதாக இருக்கும்.

நான்காவது மிக முக்கியமானது. தற்போது நடைமுறையில் இல்லை என நினைக்கிறேன். இரத்த உறவு திருமணத்தை இயலுமானவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இதைத் தவிர தற்போதைய நிலையில் காலநிலை மாற்றங்களும் இக் கண் நோய்கள் அதிகரிக்கக் காரணமாகவுள்ளன.

இவ் ஐந்து விடயங்களில் இருந்தும் அவதானமான இருந்தால் கண் நோயின் தாக்கத்தினை குறைக்க முடியும் இவ்வாறு வைத்தியர் தெரிவித்துள்ளார்
Previous Post Next Post


Put your ad code here