.webp)
அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டியில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் வெற்றிகளை தம்வசப்படுத்தியுள்ளனர்.
கடந்த 5ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் , தனி நடனம் - முதலாம் இடம் , நாட்டிய நாடகம் (குழு) முதலாம் இடம் , மேலும் தனி இசை பிரிவு 3 இரண்டாம் இடமும் பெற்றுக் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இம்மாணவர்களை வழிப்படுத்திய நடனம் மற்றும் இசை ஆசிரியர்களுக்கும், பக்கவாத்தியக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கல்லூரி சமூகம் தெரிவித்துக் கொண்டுள்ளது.
.webp)
