யாழில் இருந்து கதிர்காமத்திற்கான பாத யாத்திரையில் சித்திர தேர் - தேருக்கு நிதியுதவி வழங்க கோரிக்கை..!!!



இராவணேஸ்வரன் சித்திர தேருக்கு நிதி சேகரிக்கும் அருள் பணியை தாம் ஆரம்பித்து உள்ளதாகவும் அதற்கு அடியவர்கள் உதவ வேண்டும் என திருநீற்று சித்தர் என அழைக்கப்படும் , தவத்திரு கணபதி கதிர்வேல் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதியில் இருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரையை முன் நின்று நடத்தி வருகிறேன். யாத்திரையின் போது , முன்னின்று வேல் தாங்கி செல்பவன் நானே..

எதிர்வரும் காலத்தில் பாத யாத்திரையின் போது சித்திர தேரினையும் இழுத்து செல்ல உள்ளோம். அந்த சித்திர தேரினை வடிவமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியுதவிகளை அடியவர் தந்து உதவ வேண்டும் என தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');