Saturday 9 December 2023

இன்றைய ராசிபலன் - 09.12.2023..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தின் மீது அதிக அக்கறை இருக்கும். குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் என்பதை கவனிப்பீர்கள். வீட்டு பெரியவர்களுக்கு என்ன தேவை, என்ன பிரச்சனை என்பதை பேசி தீர்ப்பீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவீர்கள். மனைவியின் ஆதரவு கிடைக்கும். மாமனார் வீட்டு வழி உறவால் நல்லது நடக்கும். மற்றபடி வியாபாரம் தொழில் இவைகளில் நன்மை நடக்கக்கூடிய நாள் இது. மன நிறைவான இந்த நாளில் குலதெய்வத்துக்கு நன்றி சொல்லுங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய ஆசைகள் உண்டாகும். அடுத்தவர்களை பார்த்து, அதுபோல நாமும் ரொம்ப ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். பேராசைப்பட்டு கையில் இருக்கும் பணத்தை இழக்கக்கூடாது. ஜாக்கிரதை, மனதை இன்று நீங்கள் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையானதை அந்த இறைவன் கொடுப்பான். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களை முழுசா நம்பாதீங்க. வீட்டில் பெரியவர்கள் சொல்பேச்சு கேட்பது இன்று நன்மையை தரும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத வீண் விரைய செலவுகள் திடீரென்று வந்து நெருக்கடி செய்யும். சேமிப்பை கரைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனசு கொஞ்சம் கஷ்டப்பட தான் செய்யும். ஆனால் கெட்ட நேரம் வரும்போது இதையெல்லாம் நம்மால் தவிர்க்க முடியாது அல்லவா. கொஞ்சம் அனுசரித்து இன்றைய நாளை கடந்து செல்லுங்கள். குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆசையை நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் நிறைவேறாத ஆசையை இன்று நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் வெளியிடங்களுக்கு சென்றால் பணத்தை கணக்கு பார்த்து செலவு செய்யவும். தண்ணீராக பணம் கரைந்து போய்விட்டால் இந்த மாத இறுதியில் திண்டாட்டம் வந்துவிடும் ஜாக்கிரதை. வீட்டில் உறவினர்களின் வருகை மன நிறைவை கொடுக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை அமையும். வருத்தத்தோடு காணப்பட்டாலும் பிரச்சனைகள் பெரிய அளவில் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு பிரச்சனை என்று வரும்போது சக மனிதர்கள் உதவி செய்வார்கள். கவலைப்படாதீங்க, இன்று சுறுசுறுப்பை வர வைக்க நல்ல உடற்பயிற்சி செய்துவிட்டு காலை வேலைகளை தொடங்குங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகள் தலைவிரித்து ஆடியபோது, இருந்த மனக்கசப்பு இன்று சரியாகும். எப்படியாவது வாழ்ந்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையை இன்று உங்களுக்குள் உருவாகும். அந்த நம்பிக்கை உங்களை வாழ்க்கையின் அடுத்த படித்துக் கொண்டு செல்லும். முன்னேற்றம் நிறைந்த இந்த நாளில் உங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்யுங்கள். அந்த மன நிறைவே நன்மையை நடக்க வைக்கும்.

துலாம்


துலாம் ராசி காரர்களுக்கு இன்றைய நாள் யோசனை அதிகமாக இருக்கும். அடுத்து என்ன செய்யலாம், அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். சில பேருக்கு கடந்த கால நினைவுகள் எல்லாம் ஞாபகத்தில் வரும். நல்ல நினைவுகளும் வரும். கொஞ்சம் கசப்பான நினைவுகளும் வரும். பழைய கதையை நண்பர்களுடன் பேசி நேரத்தை கழிப்பீர்கள். இதுவும் சுகமான ஒரு சுமையாக தான் இருக்கும். அனுபவ பாடங்களை இன்று கற்றுக் கொள்ளுங்கள் ‌

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக இருக்கும். டென்ஷனை எல்லாம் கீழே இறக்கி வைத்து விடுவீர்கள். மனதை லேசாக்குவீர்கள். கோவில் குளங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி அன்பு வெளிப்படும். ஒருவருக்கு ஒருவர் மனசு விட்டு பேசக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். விவசாயிகளுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முயற்சிகள் வெற்றியைத் தரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனது வலிமையாக இருக்கும். நிறைய பிரச்சனை வந்தாலும் அதை தட்டி தூக்கி தூர போட்டு விடுவீர்கள். அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு உங்களுடைய மனது பக்குவமாக இருக்கும். இன்றைய நாளில் நிறைய விஷயங்களை சாதிக்கலாம். உங்களுக்கு சாதகமாக நிறைய நல்ல முடிவுகள் வரும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கு தேவையான முயற்சிகளை எடுக்கலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். காதல் கை கூடும். வீட்டில் திருமண பேச்சு வார்த்தை நடக்கும். சகோதர சகோதரி உறவு வலுபெறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்து விடவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிம்மதியாக இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். வேலை செய்யும் இடத்திலிருந்து பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய் மண்ணை விட்டு பிரிந்து இருக்கிறோமே என்ற கவலையில் இருப்பீர்கள். எப்போது சொந்த நாடு திரும்ப வாய்ப்பு கிடைக்கும் என்ற நினைப்பும் சில பேருக்கு இருக்கும். நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனசு கவலையாக இருக்கும். சில பேருக்கு வருமானத்தில் பிரச்சனை இருக்கும். சம்பளம் வராததால் செலவை சமாளிக்க முடியாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாகனம் பழுது பார்ப்பது, வீட்டில் போனது வந்ததை பழுது பார்ப்பது என்று செலவுகளை சமாளிப்பதற்கு சிக்கல்கள் உண்டாகும். கொஞ்சம் குபேரரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் சரியாகும். மன வருத்தப்படாதீங்க. உதவி என்றால் மனைவியை கேளுங்க. அனா அவசியமா மற்றவர்களிடம் கடன் வாங்கும் பழக்கத்தை நிறுத்திடுங்க.
SHARE