கிளிநொச்சி சாந்தபுரத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான 88 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 47 பவுண் நகைகளை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 29.11.2023 அன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பிரதான சந்தேக நபர் அவரது மனைவி உள்ளிட்ட மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்து வரும் கணவன் மற்றும் மனைவி இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்த திருடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி மற்றும் ஐபோன் ஒன்றும், 198,000 பணம் மற்றும் ஹெரோயின் 430 மில்லி கிராம், வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், உதயநகர் பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news