நாட்டில் நாளை முதல் மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அதன்படி, சாதாரண தர மதுபானசாலைகளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு சுற்றுலாத்துறை அனுமதி பெறாத மதுபானசாலைகள் முற்பகல் 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அனுமதி பெற்ற மதுபானசாலைகள் முற்பகல் 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news