குடும்ப சண்டையில் வீட்டுக்கு தீ வைத்த கணவனால் பரபரப்பு..!!!


புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான தகராறில் எல்லை மீறிய கணவன் தீ வைத்து வீட்டை கொழுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கோபமடைந்த கணவர் தீ வைத்து வீட்டை கொழுத்தியுள்ளார்.

சம்பவத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here