கிளிநொச்சி, விசுவமடு கொழுந்துபுலவு பகுதியிலுள்ள வீடொன்றில் தண்ணீர் தொட்டியை கசிப்பு உற்பத்தி செய்யும் இடமாக மாற்றிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விசுவமடு கொழுந்துபுலவு பகுதி வீட்டொன்றின் பின் புறமாகவுள்ள தண்ணீர்த் தொட்டியை சூட்சுமமாக கசிப்புக் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரம் பொலிஸார் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 34 போத்தல்களில் கசிப்பு மற்றும் 712 போத்தல்களில் கசிப்புக் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸார் கூறியுள்ளனர்.
Tags:
sri lanka news