மருந்து ஒவ்வாமை காரணமாவே யாழ்.பல்கலை மாணவி உயிரிழப்பு..!!!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் உயிரிழந்தார்.

உயிரிழப்பு தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மாணவியின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here