வற் வரி 18%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய பொருட்கள் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜனவரி மாதம் முதல் பாடசாலை உபகரணங்களின் விலை இரட்டிப்பாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து, தற்போதைய விலைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய நாட்டு மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், விலை அதிகரிக்கப்பட்டால் மேலும் மோசமான நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்படுவார்கள்.