யாழ்.சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன் திடீரென உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - யமுனா ஏரி இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி , விடுவிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் திடீரென இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் , இளைஞனின் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுகிறது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வைத்திய சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here