யா / நெல்லியடி மத்திய கல்லூரியில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
துன்னாலை வடக்கு பகுதியில் இச் சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி வீட்டில் தூக்கிட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் குறித்த மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .
நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆதவன் வயது 14 என்ற மாணவன் இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.