திடீர் சுகயீனமுற்ற நிலையில் 10 மாணவர்கள் அக்கரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
கொடிகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர்.
இவர்கள் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் உள்ள நீர் வடிகான் ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு திடீரென சுகயீனமடைந்ததாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதலில் 5 மாணவர்களும் 2 மாணவிகளுமே இவ்வாறு சுகயீனமடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் பின்னர் மேலும் சில மாணவ,மாணவிகளுக்கும் இந்த அரிப்பு ஏற்பட்டதால் அவர்களும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
sri lanka news