வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப மற்றும் ராஜ யோகத்தை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மகர ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் போது மகர ராசியில் சூரியன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஒன்றாக பயணிக்கவுள்ளனர். இதனால் இந்த சதுர்கிரக யோகமானது பிப்ரவரி 12 முதல் மகர ராசியில் உருவாகவுள்ளது. ஏனெனில் பிப்ரவரி 12 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியில் நுழையவுள்ளார்.
இந்த சதுர்கிரக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிறைய பணம் கையில் சேரப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முதலீடுகளால் நிறைய லாபத்தையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் காணலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த யோக காலத்தில் நல்ல மன உறுதியுடன் இருப்பீர்கள். எடுக்கும் அனைத்து முடிவுகளும் பயனுள்ளதாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் அமையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
Tags:
Rasi Palan