
காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 19 வயதுடைய யுவதியாவார்.
இவர் 22 வயது இளைஞர் ஒருவருடன் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த இளைஞர் கடந்த சில நாட்களாக யுவதியுடனான உறவினை முறித்துக் கொள்ள முயன்ற நிலையில் இது தொடர்பில் யுவதியிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த யுவதி, இளைஞருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், யுவதி தனது சகோதரன் மற்றும் தாயுடன் இளைஞனை சந்திப்பதற்காக மீன் சந்தை ஒன்றிற்குள் சென்றிருந்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யுவதி இந்த இளைஞரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட யுவதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:
sri lanka news