தேவர்களின் குருவான குரு பகவான் வருடம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இது தவிர 2 மாதங்களுக்கு ஒரு முறை நட்சத்திரங்களையும் மாற்றுவார். இப்படி குருவின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.
ஜோதிடத்தில் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது குரு பகவான் செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். சமீபத்தில் குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி நடந்தது. அதாவது பிப்ரவரி 3 ஆம் தேதி குரு பகவான் பரணி நட்சத்திரத்திற்கு இடம் பெயர்ந்தார். பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன்.
சுக்கிரனின் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்திருப்பது பல ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக அந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருப்பதோடு, பொருள் வசதிகளையும், செல்வ செழிப்பையும் பெறக்கூடும். இப்போது குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் வரை அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சியானது நற்பலனைத் தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவு நிறைவேறும். வெளிநாட்டில் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கி முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். வீடு, சொத்து வாங்கும் ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்புகள் இக்காலத்தில் கிடைக்கும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். குருவின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைப்பதால், ஒவ்வொரு துறையிலும் சிறப்பான வெற்றயைப் பெறுவீர்கள்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் இலக்கை எளிதில் அடைவீர்கள். ஆனால், ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களை வழங்கவுள்ளது. முக்கியமாக இந்த பெயர்ச்சியால் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு ஒவ்வொரு விஷயத்திலும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
இக்காலத்தில் செய்யும் எந்த ஒரு முதலீடுகளும் நல்ல லாபத்தைத் தரும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியையும், பதவி உயர்வையும் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
Tags:
Rasi Palan
