கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பரமன்கிராய் பகுதியில் அமைந்துள்ள தனுஐன் முன்பள்ளியில் கல்வி கற்கும் 20 மாணவர்களுக்கும் நேற்றையதினம் (14) கேமா அறக்கட்டளையினால் புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.
விவசாயத்தினை ஜீவனோபாய தொழிலாக கொண்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களின் குழந்தைகள் கல்விகற்கும் இப்பாடசாலையில் குறித்த தேவைகள் இருப்பதாக பாடசாலை கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த தேவை பூர்த்திசெய்யப்பட்டது.
மேலும் குறித்த புத்தகப்பைகளுக்கான நிதியுதவியினை அன்பளிப்பாக பிரான்சை சேர்ந்த சிந்துஜன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.