யாழில் உண்ணாவிரதம் வரை சென்ற ஆலய பிணக்கு..!!!


யாழில் ஆலய பிணக்கு காரணமாக , வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தத்தினால் நேற்றுமுன்தினம் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுழிபுரம் மத்தி கறுத்தனாந்தோட்டம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கினைத் தீர்த்து பொதுக்கூட்டத்தினை நடத்துமாறு வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தமிழ் சைவ பேரவையினரால் வழங்கபட்ட வாக்குறுதிக்கு அமைவாக குறித்த உண்ணாவிரதம் இன்று கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here