'S' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? அப்போ இப்படித்தான் இருப்பீர்கள்..!!!


எண் கணிதத்தின் படி, 'S' என்ற எழுத்து எண் ஒன்றிற்கு இணையானது. இத்தகையவர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பார்கள்.

மேலும், இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர்.

இவர்களின் பண்புகள் மற்றும் ஆளுமை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். விசேட பண்புகள் இவர்கள் மிகவும் ரொமான்டிக்காக பேசத் தெரியாது.வார்த்தைகளால் அன்பை வெளிக்காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவர்.


விசேட பண்புகள்

‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர்களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்

இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். இன்னும் முன்னேறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், S எழுத்தைக் கொண்டவர்கள்.

S- என்னும் எழுத்து, வளைந்து நெளிந்து பாம்புபோல் இருப்பதுபோல், இந்த எழுத்தில் தொடங்கும் நபர்கள் வளைந்து நெளிந்து கொடுத்து கவனமாக முன்னேறும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கற்பனைத்திறன் அதிகளவு இருக்கும். கலைத்துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். விளையாட்டில் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள். சமூக சேவையில் அதிகளவில் இருப்பார்கள்.

கனிவாகவும் இனிமையாகவும் பேசும் திறமை கொண்டவர்கள். இதனால், மக்கள் செல்வாக்கு S-எனும் பெயரில் வைத்தவர்களுக்கு அதிகம் இருக்கும். கணவன் - மனைவி இடையே விட்டுக்கொடுத்து வாழ்வார்கள்.

மிகவும் சாந்த சொரூபியாகவும், தேவைப்படும் இடங்களில் சிறிதளவு கோபமும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வெழுத்தில் தொடங்கும் நபர்களுக்கு, பொறுப்புணர்வு அதிகம் இருக்கும்.
Previous Post Next Post


Put your ad code here