யாழில் இனி நடைபெறும் இசை நிகழ்வுகளுக்கு எமது நெறிப்படுத்துதல் இருக்கும்..!!!



யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தமது நெறிப்படுத்தல்கள் இல்லதாமையும் ஒரு காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு எங்களுடைய இளைஞர்களை பலரும் குறை கூறுகின்றனர். நிகழ்வில் இளைஞர்கள் சிலர் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் அறிந்து கொண்டேன்.

நிகழ்வு தொடர்பில் யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கூடிய கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நானும் அதனை பார்த்து இருக்க வேண்டும். நானும் அது தொடர்பில் கரிசனை இல்லாமல் இருந்து விட்டேன்.

இனிவரும் காலங்களில் இப்படியான நிகழ்ச்சிகள் நடைபெறுமாக இருந்தால் , மக்கள் பிரச்சனைகள் இன்றி சந்தோசமாக நிகழ்வுகளை கண்டு களிக்க கூடியவாறான ஏற்பாடுகளை செய்வோம் என தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here