தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி : சூட்சுமான முறையில் 4 மில்லியன் ரூபா மோசடி..!!!


பேருவளையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் போது சுமார் நான்கு மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் காசாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயாகல, ஹல்கந்தவில, துவாகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை, அம்பேபிட்டியகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2023.06.09 முதல் 2024.02.06 வரை இந்த மோசடி நடந்துள்ளது, மேலும் 12 ஊழியர்கள் நிறுவனத்தில் பணி புரிகின்றனர்.

கடையின் கணினி அமைப்பு மற்றும் பாதுகாப்பு கமரா அமைப்பை ஆய்வு செய்த போது, பணத்திற்கும் வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய 1475 பட்டியல்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை இதன்போது தெரிய வந்துள்ளது.

இந்தப் பணத்தை பட்டியல்கள் கணினி கட்டமைப்பில் பதிவு செய்து ஏமாற்றியதாக முறைப்பாட்டாளர் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here