வவுனியா ஆதிலிங்கேஸ்வரர் முன் பாதணிகளுடன் பௌத்த தேரர்..!!!


வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென விஜயம் செய்த பௌத்த குருமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றமை தெரிய வந்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) பௌத்த குருமார் உள்ளடங்கிய குழுவினர் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பகுதிக்குச் சென்றிருந்தனர்.

அங்கு சென்ற பௌத்த குருமார் இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருந்ததாக தெரியவருகின்றது.

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் குறித்த குழுவினரை அழைத்து சென்றமை தற்போது ஆதாரமாக வெளிவந்துள்ளது.

குருந்தூர் மலை உட்பட பல்வேறு இடங்களிலும் பௌத்த குருமார் இராணுவத்தினர் மூலமாக செயற்பட்டு வரும் நிலையில் வெடுக்குநாறி ஆலயத்திலும் இராணுவத்தினர் பின்புலத்தில் இருந்து பௌத்த மயமாக்கல் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.






Previous Post Next Post


Put your ad code here