நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படத்திற்கான டைட்டில் குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து வரும் படம் SK 21. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.
சோனி பிக்ஸர்ஸுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்து வரும் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, வருகின்ற பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னோட்டமாக வெளியான டீசர் அறிவிப்பு வீடியோவில், உடலை வருத்தி சிவகார்த்திகேயன் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
ராணுவ வீரராக இப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதற்காக எடையை கூட்டி நல்ல உடற்கட்டுடன் வெறித்தன லுக்கில் மிரட்டுகிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் இந்த புதிய தோற்றத்தை, சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் படத்திற்கு ‘சோல்ஜர்’ என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ராணுவ வீரர் என்பதால் இந்த பெயரினை படக்குழு தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Tags:
cinema news
