யாழில் நாளை சில பகுதிகளில் மின்தடை..!!!


மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (13.02.2024) காலை 08.30 மணி முதல் மாலை 05.00மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊரெழு அம்மன் கோவில், பொக்கணை, ஓமினி அலுமினியம் தொழிற்சாலை, கரந்தன், நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலடி, நீர்வேலி, கரந்தன், மாலை வைரவர் கோவிலடி, போயிட்டி, காரைநகர் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ, காரைநகர் ஊரி, காரைநகர் தோப்புக்காடு, காரைநகர் சீனோர் படகுத்துறை, காரைநகர் கடற்படைத் தளம், களபூமி, பாலக்காடு அம்மன் கோவிலடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here