
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த பேருந்து எதிரே பயணித்த இராணுவ வாகனத்துடன் மோதியுள்ளது.
அத்துடன், விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த பேருந்தை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி பொலிஸாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
sri lanka news
