ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுவோம்..!!!


ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுவோம் என்ற கருப் பொருளிலான கலந்துரையாடல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) மாலை 3.00மணிக்கு யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வு குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கலை நிகழ்ச்சிகள் என்றால் என்ன?

கலை நிகழ்ச்சிகளை எப்படி நிகழ்த்துவது?

கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் போது மக்கள் மத்தியில் ஏற்படக் கூடிய விளைவுகள் யாவை? போன்ற வினாக்கள் தொடர்பாக, அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பல குழப்பமான கதையாடல்கள் நமது சமூகத்தில் நிலவுகின்றன.

இந்தகையதோர் பின்னணியில் ஈழத்தமிழரிடையே கடந்த காலங்களில் நிலவிய கலை நிகழ்ச்சிகள் எத்தகையன?

அவை நிகழ்த்தப்பட்ட முறைமைகள் எத்தகையன?

அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய விளைவுகள் யாவை? என்பவை போன்ற விளக்கங்களுடன் எதிர்காலத்தில் எமது சமூகத்தை ஆற்றல் மிகு சமூகமாக மாற்றுவதற்கு நமக்குத் தேவைப்படும் கலை நிகழ்ச்சிகள் பற்றிய உரையாடல்களும் அடங்கிய இச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள், இணையத்தளம் மற்றும் வலையொலி இயக்குநர்களையும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(யாழ்.தர்மினி)

Previous Post Next Post


Put your ad code here