போர்க்களமாக காட்சி அளிக்கும் முற்றவெளி மைதானம்..!!! (Video)


யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவீதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அசம்பாவீதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , இலவசமாக இசை நிகழ்வை கண்டு கழித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்து எறிந்துகொண்டு , கட்டண அனுமதி பெற்று , இசை நிகழ்வை கண்டு களித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து , மேடை வரையில் சென்று இருந்தனர்.

அத்துடன் , கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த உயரமான மேடைகள் , ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள் , பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி அட்டகாசத்திலும் ஈடுபட்டனர்.

கட்டுக்கடங்காம போன ரசிகர் கூட்டத்தால் கதிரைகள் , தண்ணீர் தாங்கிகள் உள்ளிட்டவையும் சேதமாக்கப்பட்டன.

இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு , பொலிஸார் , விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேலதிகமாக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து , இசை நிகழ்வை மீள ஆரம்பித்து சில ஒரு மணித்தியாலத்திற்குள் அவசர அவசரமாக முடித்துக்கொண்டனர்.

குழப்பங்களுக்கு நிகழ்வின் ஏற்பாடுகளில் உள்ள குறைகளே காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















Previous Post Next Post


Put your ad code here