18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..!!!


வேத ஜோதிடத்தின் படி, அழகு, காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு மற்றும் சூரியன் ஒன்றாக பயணித்து வருகின்றனர்.

ராகு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி நிகழும் சுக்கிர பெயர்ச்சிக்கு பின் மீன ராசியில் சூரியன், ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. அதுவும் இந்த கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது மீன ராசியில் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய உயர்வு ஏற்படப் போகிறது அலுவலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பாராட்டை வாங்கித் தரும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதால் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.


மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு, சூரிய மற்றும் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிலுவையில் உள்ள பல முக்கியமான வேலைகள் இந்த 3 கிரகங்களின் சேர்க்கை காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்களின் திட்டங்கள் அனைத்தும் நல்ல பலனைத் தரும்.
Previous Post Next Post


Put your ad code here